மும்பை ஆடுகளம் குறித்து ரிக்கி பாண்டிங் புகார்
சிட்னி:
மும்பை போன்ற ஆடுகளங்களை இந்தியா தயாரித்தால், அந் நாட்டு கிரிக்கெட் அணியால் சர்வதேச அளவில் முன்னணிஅணியாக மாறமுடியாது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது. இந் நிலையில் ஆஸ்திரேலியஇணையதளம் ஒன்றிற்கு பாண்டிங் அளித்த பேட்டியில் ஆடுகளத்தை குறை கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
மும்பை போட்டியில் தோற்றதற்காக எனது அணி வீரர்கள் ஒருவரைக் கூட குற்றம் சொல்லவே முடியாது. ஏனெனில் ஆடுகளம்அவ்வளவு மோசமாக இருந்தது. இரண்டே நாட்களில் 40 விக்கெட் விழுந்ததை வைத்தே ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளமுடியும்.
மும்பை ஆடுகளம் குறித்து நான் முறைப்படி புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது குறித்து இந்தியக் கேப்டன் ராகுல்டிராவிட்டிடம் பேசத் திட்டமிட்டிருக்கிறேன். அவரும் இதே கருத்தை கொண்டிருக்கிறார்.
இந்திய ஆடுகளப் பராமரிப்பாளர்கள் இப்படி ஆடுகளம் தயாரித்துக் கொண்டிருந்தால் இந்திய கிரிக்கெட் அணியால் சர்வதேசஅளவில் முன்னணி அணியாக வளர்ச்சியடைய முடியாது. நாக்பூர் ஆடுகளம் போலத் தயாரித்தால்தான் எந்த நாட்டுக்குச்சென்றாலும் அந்த அணி வெற்றி பெற முடியும்.
மும்பை போன்ற ஆடுகளங்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல... போட்டியைக் காணவந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமளிக்கவே செய்யும்.இவ்வளவு தரக்குறைவான ஆடுகளம் அமைத்தது தொடர்பாக ஐ.சி.சி. நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கும்ப்ளே மறுப்பு:
இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மும்பை ஆடுகளம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை அது ஒரு அருமையானஆடுகளம். பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர், ஸ்பின்னர் இந்த மூன்று பேருக்கும் ஒத்துழைக்கக்கூடியதே சிறந்த ஆடுகளம்என்று நினைக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் மும்பை ஆடுகளம் நன்றாகவே இருந்தது.
நமது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய அணிஆஸ்திரேலியா செல்லும் போது, அங்கு நமக்கு ஏற்றவகையில் சுழல் ஆடுகளமா அமைத்துத் தருகிறார்கள்?
எந்த அணியும் சொந்த மண்ணில் விளையாடும்போது, தனக்குச் சாதகமான ஆடுகளம் அமைத்துக் கொள்வது இயற்கையே என்றுகூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications