கமல் படத்தின் பெயரை மாற்ற ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கப் போகும் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்று கோரிஅவருக்கு கடிதம் எழுதப் போவதாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர்கூறியுள்ளனர்.
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர்டாக்டர் சேதுராமன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பேசுகையில், இந்துக் கோவில்களில்ஆரம்ப காலத்தில் தமிழில்தான் அர்ச்சனைகள் செய்யப்பட்டு வந்தன. வட மொழியினர் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு கோவில்களில்வட மொழி திணிக்கப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
இன்னும் 2 மாத காலத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்துவோம்.
இந்து சமய மடாதிபதிகள், துறவிகள் இதுகுறித்து கலந்து பேசி நல்ல முடிவாக அறிவிக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தின்மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கப் போகும் புதிய படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தப்பெயர் தமிழில் இல்லை. எனவே இதை ஏற்க முடியாது. படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு கோரி அவருக்கு மடல்எழுதுவோம். அவர் பெயரை மாற்றிக் கொண்டால் நல்லது என்றார்கள்.
தமிழ்த் திரையுலகுக்கு எதிராக சமீப காலமாக அரசியல்வாதிகள் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். ரஜினியின் பாபாபடத்திற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் கமல்ஹாசனின் சண்டியர் படத்தின் பெயரை மாற்றக் கோரி புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சினை கிளப்பினார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் கஜேந்திரா படத்திற்கு ராமதாஸ் கடும் பிரச்சினை எழுப்பினார். இப்போது மீண்டும் ஒருமுறை கமல்ஹாசனின் படத்திற்கு பிரச்சினை கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications