ஜானகி எம்ஜிஆரின் வீட்டை ஆக்கிரமித்த தனுஷ்கோடி !
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் மகன் சுரேந்திரனுக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்யுமாறு காங்கிரஸ்எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரான ஜானகி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் ஜே.சுரேந்திரனுக்கு சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் ஒரு வீடுஉள்ளது. இந்த வீட்டை தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. ஆக்கிரமித்துள்ளதாக சுரேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.
இவ் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி ஜானகி எம்.ஜி.ஆரின் மருமகள் வசந்தி தேவி, அந்த வீட்டில்குடியிருக்கும் பொன்னுச்சாமி ஆகியோரும் மனு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் குமார்,
சம்பந்தப்பட்ட வீடு தனக்குத்தான் சொந்தம் என்று நிரூபிக்கும் பொருட்டு வசந்தி தேவி தாக்கல் செய்த உயில் பத்திரம்போலியானது என்பது தெரிய வருகிறது.
மேலும், வீட்டில் குடியிருப்பதாக கூறும் பொன்னுச்சாமியும் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.தனுஷ்கோடி ஆதித்தன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களும் போதுமானதாக இல்லை.
எனவே மனுதாரர் சுரேந்திரனுக்கே இந்த வீடு சொந்தமானது என்று தீர்ப்பளிக்கிறேன். அந்த வீட்டில் குடியிருப்போர் உடனடியாககாலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன் என்று அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தார் நீதிபதி அசோக் குமார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி வீட்டைக் கையகப்படுத்த வழக்கறிஞர்களுடன் சுரேந்திரன் சென்றபோது வீடு பூட்டியிருந்தது.இதைத் தொடர்ந்து சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தை சுரேந்திரன் நாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி முகம்மது பரூக், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுரேந்திரனுக்கு அந்த வீடு சொந்தமானது. எனவே,போலீஸார் தற்போது அந்த வீட்டின் பூட்டை உடைத்து அதில் குடியிருப்பவர்களை வெளியேற்றி மனுதாரரிடம் வீட்டைஒப்படைக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.
வீட்டை ஆக்கிரமித்த தனுஷ்கோடி ஆதித்தன், அதில் பொன்னுசாமியை தங்க வைத்துள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications