பா.ஜ.க, முலாயம் மீது ராகுல் கன்னாபின்னா தாக்குதல்
அமேதி:
மத அரசியல் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைகளை வைத்து அரசியல் நடத்த பா.ஜ.க. முன் வர வேண்டும் எனகாங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகனும் எம்.பியுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வழக்கமாக நிருபர்களிடம் அதிகம் பேசாத ராகுல் இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது அமேதி தொகுதியில் சுற்றுப் பயணம்செய்தபோது நிறையவே பேசினார்.
அவர் கூறியதாவது:
மத அரசியலை விட்டுவிட்டு மக்கள் அரசியல் நடத்துவது தான் பா.ஜ.கவுக்கும் நாட்டுக்கும் நல்லது. அப்போது தான்காங்கிரசுக்கு அக் கட்சி சிறந்த போட்டியைக் கொடுக்கும் கட்சியாக இருக்க முடியும். அதைவிட்டுவிட்டு தொடர்ந்து மதவிவகாரங்களையே கையில் எடுத்துக் கொண்டிருந்தால் அது எங்களுக்குத் தான் சாதகமாக அமையும் என்பதை பா.ஜ.க.தலைவர்கள் உணர வேண்டும்.
ராமர் பெயரைச் சொல்லி இனியும் அரசியல் நடத்திவிட முடியாது. கடந்த தேர்தலில் ராம பிரானே பாஜகவுக்கு பாடம்புகட்டிவிட்டார். மதத்தை வைத்து அரசியல் நடத்தும் விஷயத்தில் அந்தக் கட்சிக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது.
எனக்கு இந்தியப் பெண்ணைப் பார்த்து கட்டி வைக்கத் தயாராக இருப்பதாக சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கூறியிருக்கிறார்.பாவம், அவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?. எனக்கு பெண் பார்ப்பதைவிட மகாராஷ்டிர மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யஅவர் முயற்சிக்கலாம்.
கடந்த மக்களைவைத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க தோல்விடைய காங்கிரஸ் தான் முக்கியக் காரணம். உத்தரப்பிரதேசத்திலும் அக் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி காரணமல்ல.
கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கொண்டிக்க உத்தரப் பிரதேசமோ பின்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. இந்த மாநிலமே ஜாதி- மதத்தின் அடிப்படையில் நடத்தப்படும் அரசியலால் சீரழிந்துபோய் கிடக்கிறது.
எனது அமேதி தொகுதியில் தொழிற்சாலை தொடங்க பல தொழிலதிபர்கள் முன் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு மின்சாரம்கூட தர இயலாத நிலையில் மாநில அரசு உள்ளது. முலாயம் சிங்கின் அரசு செயல்படுவதாகவே தெரியவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி வெறும் 3 சதவீதம் தான். உத்தரப்பிரதேசத்தின் இந்த பிற்போக்குப் பயணம் தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தேங்க வைத்துக் கொண்டுள்ளது.
இங்கு அரசாங்கம் இருக்கிறது, ஆனால் அது செயல்படுவதில்லை. தொழிற்சாலைகள் வருவதில்லை. காரணம் மின்சாரம் இல்லை.
எதற்கெடுத்தாலும் ஜாதி, மத அரசியல் தான். ராகுல் தொகுதியா?, சோனியா தொகுதியா?. அதற்கு ஏதும் செய்யக் கூடாது என்றுசெயல்படுகிறது மாநில அரசு. சொந்த மக்களுக்கே நல்லது செய்ய முன்வராத அரசால் என்ன பயன்?
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications