பக்தையை மகளோடு கடத்திய சாமியார் !
சென்னை:
தனது பக்தை மற்றும் அவரது மகளைக் கடத்திச் சென்ற போலி சாமியாரை போலீஸார் பிடித்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் என்ற சதுர்வேத சுவாமி. சென்னையில் ஆஸ்வர கிளை வைத்துள்ளார்.
இவரது தீவிர பக்தையானார் பிரபல தொழிலிதிபர் (பெயரை போலீஸார் குறிப்பிடவில்லை) ஒருவரின் மனைவி.
தனது குடும்பப் பிரச்சினைகளை சதுர்வேத சுவாமியிடம் தொழிலதிபரின் மனைவி எடுத்துக் கூற, ஹைதராபாத்தில் உள்ள எனதுஆசிரமத்தில் வைத்து பரிகாரம் செய்யலாம் என்று கூறியுள்ளார் சுவாமிகள்.
இதை நம்பிய தொழிலதிபரின் மனைவி தனது மகளுடன் சாமியாருடன் ஹைதராபாத் சென்றுள்ளார். இதையடுத்து தனதுமனைவியும், மகளும் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் தொழிலதிபர்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, இருவரும் சாமியாரால் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டதுதெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை மீட்டனர்.
சாமியார் தங்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிக் கடத்தி வந்துவிட்டதாக அப்போது போலீஸாரிடம் தொழிலதிபரின் மனைவிகூறியுள்ளார்.
இதையடுத்து சாமியாரை போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை விவகாரத்தை அறிய தீவிரவிசாரணை நடக்கிறது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications