தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: ஜெ.
சென்னை:
தமிழக காவல்துறையை நவீனமாயமாக்க ரூ. 515 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் வளாகத்தில் புதிய காவல்துறை தலைவர் (டிஜிபி) அலுவலகத்துக்கானஅடிக்கல்லை இன்று நாட்டினார் ஜெயலலிதா. 24 ஏக்கர் பரப்பளவில் ரூ. 30 கோடி செலவில் இந்த டிஜிபி அலுவலக வளாகம்அமையவுள்ளது.
இதே நிகழ்ச்சியில், சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமஞ்சேரி என்ற இடத்தில் ரூ. 48 கோடி செலவில் அமையவுள்ளகாவல்துறை அகாடமிக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தலைமை அலுவலக வளாகம், ரிசர்வ் போலீஸ் வளாகம், விழுப்புரம்மாவட்ட தலைமை காவல் அலுவலகம், பிராந்திய தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றிற்கான கல்வெட்டுக்களையும் திறந்துவைத்தார்.
சென்னை நகரில் வேப்பேரி, வடபழனி, உயர் நீதிமன்றம், எழும்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அயனாவரம் ஆகியபகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் இதே நிகழ்ச்சியில் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில்,
நாட்டிலேயே தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதை அப்படியே பராமரிப்பதில் நான் மிகுந்த ஆர்வம்கொண்டுள்ளேன். நீண்ட நாள் செயல்திட்டம், கடுமையான உழைப்பால் தான் மாநிலத்தில் தீவிரவாதிகளும சமூக விரோதிகளும்ஒடுக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை முன் இப்போதுள்ள சவால்கள் நவீனமானவை. சைபர் கிரைம், போதை மருந்து கடத்தல், வெடிகுண்டுகள்,அடிப்படைவாத சக்திகள், தொழில்நுட்பரீதியில் நடக்கும் மோசடிகள் ஆகியவற்றைத் தடுக்க வேண்டிய சவாலான பணியில்உள்ளீர்கள்.
காவல்துறையையும் நவீனப்படுத்தினால் தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். இதனால் தான் இதுவரை காவல்துறைவரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ. 515 கோடியை நவீனமயமாக்கும் திட்டதுக்காக ஒதுக்கினேன்.
நாட்டிலேயே மிகச் சிறந்த காவல்துறை என்ற நிலையை தமிழக காவல்துறை பெற வேண்டும் என்றார் ஜெயலலிதா.
இந்த நிகழ்ச்சியில் உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், நிதித்துறை செயலாளர் நாராயணன், டிஜிபி கோவிந்த் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications