ரூ. 65 கோடியில் பயோடெக் பூங்கா: இன்று திறப்பு
சென்னை:
சென்னை தரமணியில் ரூ. 65.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயிரி தொழில்நுட்பப் பூங்காவை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைக்கிறார்.
5 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த உயிரி தொழில்நுட்பப் பூங்கா திட்டப்பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டன.அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப உதவியோடு இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் ரூ. 1,000 கோடி முதலீடும், 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும். மொத்தம் ஐந்துதளங்களைக் கொண்ட இந்தப் பூங்காவில், 82,000 சதுர அடி பரப்பளவு ஆய்வகப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பாதுகாப்பு வசதிகள், தடையற்ற மின் வசதி, 100 சதவீத குளிரூட்டும் வசதி, கழிவுகளை அகற்ற நவீன வசதி,வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்தப் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இங்கு தங்களது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளைமேற்கொள்ளலாம். அந் நிறுவனங்களுக்கு வாடகை மற்றும் விற்பனை அடிப்படையில் இங்குள்ள உள்ள இடவசதிகள்ஒதுக்கப்படும். இதுவரை 28 சதவீத இடங்கள் பதிவாகியுள்ளன.
டைசல் பூங்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. உயி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் இங்குமேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பூங்காவை ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார். இந் நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர்நயினார் நாகேந்திரன், மாநில தொழில்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இத் தகவலை தொழில்நுட்பப் பூங்கா குறித்த தமிழக தொழில்துறைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா மற்றும் உயரி தொழில்நுட்பபூங்கா நிர்வாக இயக்குநர் விஸ்வநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறினர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications