இளைஞர்களுடன் சென்னையில் ராமதாஸ் போராட்டம்
சென்னை:
அரசுப் பணிக்கு ஆட்களே சேர்க்கப்படாத நிலையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்டியாக செயல்படுவதைக்கண்டித்து வரும் 16ம்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர்களுடன் சென்று போராட்டம் நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாடைகளுடனும், பட்டாசுகளுடனும் தீபாவளியை உற்சாகமாகக்கொண்டாடுவது தமிழக மக்களின் வழக்கம். ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள பல வீடுகளில் சந்தோஷம் இல்லை. காரணம்வறுமை, வேலையின்மை.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெருமளவு அதிகரித்துள்ளது.ஆட்சியில் உள்ளவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆடம்பர விழாக்களிலும், பாராட்டு உரைகளிலும் மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அரசு வேலை வாய்ப்பகங்களில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டி விட்டது.நாட்டிலேயே வேலைக்காக காத்திருப்போன் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இவர்களில் ஒருவருக்குக் கூட தமிழக அரசு வேலை கொடுக்கவில்லை. அரசுப் பணிக்கானஆளெடுப்புக்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் இதற்குக் காரணம்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் கொடுத்த தண்டனைக்குப் பிறகு பல தடைகளை நீக்கிய தமிழக அரசு இந்தத் தடையை மட்டும்நீக்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. புதிதாக ஆளெடுக்க நிதி நிலை இடம் கொடுக்கவில்லை என்று கூறும் அரசு, அரசுப்பணியாளர் தேர்வாணைய ஊழியர்களுக்கு மட்டும் வீணாக சம்பளம் கொடுத்து வருகிறது.
தேர்வாணையக் குழுவில் புதிது, புதிதாக ஆட்களை சேர்த்து, வேண்டியவர்களுக்குப் பதவி கொடுத்து வீண் செலவு செய்கிறதுதமிழக அரசு.
அரசின் வீண் செலவுகளைக் கண்டித்தும், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரியும், ஆளே எடுக்காமல் உள்ளநிலையில் தேர்வாணையத்தையே மூடக் கோரியும் வரும் 16ம் தேதி வேலையில்லாத இளைஞர்களைத் திரட்டி சென்னையில்மாபெரும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் இப்போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications