ஜெயலலிதா மீது வசை பொழியும் எஸ்.ஆர்.பி
சென்னை:
பேயை விரட்டினாலும் பெருமை தன்னை வந்து சேர வேண்டும் என்று கருதுபவர் முதல்வர் ஜெயலலிதா என்று காங்கிரஸ்சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
வரும் 16ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
புதிய கவர்னர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக சட்டமன்றம் கூடுகிறது. நம் முதல்வரைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியினரை எதிரிக் கட்சிகளாகவும் பொறுப்பற்றவர்களாகவும் கருதுபவர்.
விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் விடை கொடுப்பதையே கடமையாக கருதுபவர். தான் என்னும் தலைக்கணத்துடன்ஆணவத்துடன் எதையும் சந்திப்பார், நடந்து கொள்வார்.
தன் கட்சிக்காரக்கள் மட்டுமின்றி, மற்ற கட்சிக்காரர்களும் ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றுஎதிர்பார்ப்பவர். மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட தனது புகழ் புடவதற்குரிய செயல்களைச் செய்வதிலேயே குறியாகஇருப்பார்.
பேயை விரட்டினாலும் பெருமை தன்னையே வந்து சேர வேண்டும் என்று கருதுபவர்.
ஆனால், ஜெயலலிதாவே விரும்பாவிட்டாலும் தமிழக எதிர்க் கட்சிகள் இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன.இதனால் எதிர்க் கட்சிகளை ஒதுக்கித் தள்ள முடியாத இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கூடும் சட்டசபைக் கூட்டம் பல எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும். தன்னை முன்னிலைப்படுத்திவிளம்பரம் தேடும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படாமல் மக்களுக்கு நல்லது செய்ய சட்டமன்றக் கூட்டத்தை முதல்வர்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எஸ்.ஆர்.பி. காட்டமான அறிக்கை விட்டு இப்போதே சட்டமன்றக் கூட்டத்துக்கு காரம் சேர்த்துவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications