இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு பல்கலை.கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாகமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,

மாறி வரும் உலகச் சூழ்நிலையில், இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களையும் கிளைகள் தொடங்க அனுமதிப்பதுஅவசியம் என்று கருதுகிறோம். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் நமது கல்வி அமைப்புக்கு தொல்லை நேராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியகடமையும் மத்திய அரசுக்கு உண்டு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இதனால் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாகசெயல்படுவோம்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியில்சேர்த்திருக்கிறார்கள். இவர்களை பணியில் சேர்க்க முறையான வழிகள் பின்பற்றப்படவில்லை. டெண்டர் விட்டு ஆட்களைச்சேர்த்துள்ளார்கள்.

இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். டெண்டர் விட்டுஆசிரியர்களை காண்ட்ராக்டில் வேலைக்குச் சேர்ப்பது என்பது புது விஷயமாக உள்ளது. இதை நீங்கள் எந்த நாட்டிலாவதுகேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதே போல வெட்டியாக ரூ. 50 கோடிக்கு புத்தங்களை அச்சிட்டு பணத்தை வீணடித்திருக்கிறார்கள். இந்த புத்தங்களை என்னசெய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

தொடர் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து பா.ஜ.க இன்னும் வெளியில் வரவில்லை. அடிக்கடி கொள்கைளை மாற்றிக்கொண்டே இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. இதனால் உட்கட்சிப் பூசலும் முழு அளவில் வெடித்துள்ளது. இப்போது அக்கட்சியிடம் மிச்சம் இருக்கும் ஒரே விஷயம் இந்துத்துவா தான். ஆனால், இனிமேல் அக் கட்சி இந்துத்துவா குறித்துப் பேசினாலும்,மக்கள் அதைக் கண்டுகொள்ளப் போவதில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+