கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது!!
சென்னை:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் நேற்றிரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 3ம் தேதி கோவிலுக்குள் வைத்தே மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியது.
இந்தக் கொலை நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், கூலிப் படையை வைத்து இந்தக் கொலையை சங்கராச்சாரியாரே செய்ததாகத்தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் தங்கியிருந்த சங்கராச்சாரியாரை நேற்றிரவு 10 மணிக்கு தமிழக சிறப்பு கமாண்டோ படைகைது செய்தது. எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான இந்தப் படை நேற்றிரவு தனி விமானத்தில் ஹைதராபாத்விரைந்தது. பின்னர் மகபூப் நகரில் தங்கியிருந்த ஜெயேந்திரரை கைது செய்து, தனி விமானம் மூலம் இன்றுஅதிகாலை 3 மணிக்கு சென்னை அழைத்து வந்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பிரேம்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் காஞ்சிபுரம் அழைத்துச் செல்லப்பட்ட சங்கராச்சாரியார், அங்கு செசன்ஸ் நீதிமன்றமாஜிஸ்திரேட் உத்தரமராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் (26ம் தேதி வரை) காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் வேனில் வேலூர்கொண்டு செல்லப்பட்ட சங்கராச்சாரியார் அங்கு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
70 வயதான ஜெயேந்திரர் மீது கொலை, சாட்சிகளை மறைத்தல், சதி செய்தல் ஆகிய முக்கியமான 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சங்கர ராமன் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளியாகவும்அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications