நேபாளத்துக்கு தப்ப முயன்றார் சங்கராச்சாரியார்: அரசு
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வரும் புதன்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின்போது, சங்கராச்சாரியார் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக அரசுத் தரப்பின்வழக்கறிஞர் பரபரப்பான குற்றம் சாட்டினார்.
வாதத்தில் கலக்கிய ஜேத்மலானி:
இந்த ஜாமீன் மனு மீதான வழக்கில் சங்கராச்சாரியாருக்காக பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். (செக்ஸ்சாமியார் பிரேமானந்தாவுக்காகவும் ஆஜராகியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது).
சட்டத்தின் மிக நுணுக்கமான பாயிண்டுகளை எடுத்து வைத்து நீதிமன்றத்தில் இன்று சட்ட சிலம்பம் ஆடினார் ஜேத்மலானி. அவரது வாதத்திறமை எதிர்த் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இன்று காலை 11 மணிக்கு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நேபாளத்துக்கு தப்ப முயற்சி:
அப்போது நடந்த விவாதம்:
அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி: இந்தக் கொலை வழக்கில் கைதாவதில் இருந்து தப்ப ஜெயேந்திரர் நேபாளத்திற்கு ஓடதிட்டமிட்டிருந்தார். இதனால் தான் அவரை இரவோடு இரவாக அவசரமாகக் கைது செய்ய நேரிட்டது.
துரைசாமியின் இந்த வாதத்திற்கு ராம்ஜேத்மலானி கடும் எதிர்ப்பு தெவித்தார்.
நுணுக்கமான பாயிண்டுகள்:
ஜேத்மலானி வாதாடுகையில்:
கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர்களுடன் பேசக் கூட சங்கராச்சாரியாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தின் 21, 22வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டப்பிரிவுகளை காப்பாற்ற வேண்டிய கடமை போலீசாருக்கோ அரசியல்வாதிகளுக்கோ கிடையாது. ஆனால், நீதித்துறைக்கு உண்டு என்பதைநான் நினைவூட்ட விரும்புகிறேன்.
நீதிபதி பாலசுப்பிரமணியம் (இடைமறித்து): நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு மிக மிக முக்கியமானது, மிகவும் சீரியசானது. இந்தக்குற்றச்சாட்டையும் சேர்த்து ஒரு விரிவான அபிடவிட் தாக்கல் செய்யுங்கள்.
ஜேத்மலானி: அபிடவிட் தயார் செய்யும் முன் சங்கராச்சாரியார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டபோது உடனிருந்தவழக்கறிஞர்களுடன் நான் பேச வேண்டும். அதன் பின்னரே அபிடவிட் தாக்கல் செய்ய முடியும்.
நீதிபதி: இந்தக் கோரிக்கையை ஏற்கிறேன். வரும் புதன்கிழமை அபிடவிட்டை தாக்கல் செய்யுங்கள்.
ரிமாண்ட் செய்யப்பட்டதே செல்லாது:
ஜேத்மலானி: சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர்களுடன் அவரைப் பேச விடாமல் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைபோலீசார் மீறியுள்ளதால், சங்கராச்சாரியார் ரிமண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கூட செல்லாது (அப்போது டி.கே.பாசுஎன்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டினார் விளக்கினார் ஜேத்மலானி).
ஹேபியஸ் கார்பஸ்:
இப்படிப்பட்ட சூழலில் இந்த ஜாமீன் மனுவே ஹேபியஸ் கார்பஸ் (காணாமல் போனவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் மனு)மனுவின் அடையாளத்தைப் பெற்றுவிடுகிறது.
இதனால் சங்கராச்சாரியாரிடம், எப்போது விசாரணைக்குக் கூப்பிட்டாலும் வர வேண்டும் உத்தரவாதத்தை மட்டும் பெற்றுக் கொண்டுஅவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இதுவரை சங்கராச்சாரியாரைச் சந்திக்க ஒரு வழக்கறிஞர் கூட அனுமதிக்கப்படவில்லை என்றார்.
நீதிபதி (இடைமறித்து): சங்கராச்சாரியாரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அரசுத் தரப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும்.
மீண்டும் தனி பங்களா கோரிக்கை:
ஜேத்மலானி: சங்கராச்சாரியாரை சென்னையில் வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.
அரசு வழக்கறிஞர் (இடைமறித்து): இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. எப்போது தேவையோ அப்போது சங்கராச்சாரியாரைசென்னைக்கு போலீசார் கொண்டு வருவர்.
ஜேத்மலானி: 70 வயதான அந்த மத குரு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவரே தான் தனது உணவைசமைத்து சாப்பிடுவார். சிறையில் அவரே சமைத்து சாப்பிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர் துரைசாமி: சமைக்கிறேன் என்று சொல்லி சங்கராச்சாரியாருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அரசு தான் பதில்சொல்ல வேண்டி வரும். எனவே இக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது.
ஜேத்மலானி: 24 மணி நேரமும் சிறைக் கொட்டடியில் சங்கராச்சாரியாரை வைத்திருப்பது, அவரை மரணத்துக்கு தள்ளுவதற்குச் சமம்.அவரை ஏன் இரவோடு இரவாக கைது செய்ய வேண்டும்?
அரசு வழக்கறிஞர்: சங்கராச்சாரியார் நேபாளத்துக்கு தப்பியோட முயன்றதால் தான் அவசரமாகக் கைது செய்தோம். இதற்கானஆதாரத்தையும் புதன்கிழமை சமர்பிக்க நாங்கள் தயார்.
நீதிபதி பாலசுப்ரமணியம்: இந்த வழக்கு விசாரணை வரும் 17ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கு நடந்த ஹாலுக்குள் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் வந்து அமர்ந்திருந்தார். சங்கராச்சாரியாருக்குஆதரவாக அவர் இங்கு வந்திருப்பதாகவும், இவ்வாறு முன்னாள் நீதிபதி நடந்து கொள்வது தவறு என்றும் சில வழக்கறிஞர்கள் நீதிபதிபாலசுப்பிரமணியத்திடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால், இந்த புகாரை உடனே ஏற்க மறுத்த நீதிபதி, இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்யுங்கள் என்றார்.
சங்கராச்சாரியாருக்கு எதிரான ஆதரங்கள்:
முன்னதாக ஏராளமான ஆதாரங்களை போலீசார் திரட்டி முடித்த பின்னரே சங்கராச்சாரியாரைக் கைது செய்யும் முடிவுக்கு அரசுவந்துள்ளது. அவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்களில் முக்கியமான சில:
கொலையாளிகளுக்கும் சங்கராச்சாரியாருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த ஆதாரம், கொலையாளிகள் தந்த வாக்குமூலம்,சங்கராச்சாரியாருக்கு இறுதி எச்சரிக்கை என்ற பெயரில் மடத்தின் நிதிக் குளறுபடிகளை கண்டித்து சங்கரராமன் எழுதிய கடிதம்,
கொலை நடந்த மறுதினம் காஞ்சிபுரம் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ. 10 லட்சம் குறித்த ஆதாராம், அந்தப் பணத்தில் ரூ. 2.5லட்சம் கொலையாளிகளிடம் இருந்து பிடிபட்டது,
சங்கராச்சாரியாரால் கொலையாளிகளிடம் தரப்பட்ட சங்கரராமனின் வீட்டு முகவரி அடங்கிய கடிதம் ஆகியவை.












Click it and Unblock the Notifications