ஜெவிடம் முழு விளக்கம் கோருகிறார் ராமதாஸ்
சென்னை:
கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த முழு பின்னணியையும் விளக்கும் அறிக்கையை முதல்வர்ஜெயலலிதா வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கைது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில்மடத்தைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த வழக்கு, பின்னணி, நடந்ததுஎன்ன என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளங்கோவன்:
சங்கராச்சாரியின் கைதை வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் இளங்கோவன், இந்தக் கைதைத் தொடர்ந்து பல மர்மங்கள்,உண்மைகள் வெளியாகப் போகின்றன என்றார்.
வழக்கறிஞர்கள் அதிருப்தி:
காஞ்சி சங்கராச்சாரியார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருப்பது முறையல்ல என்று பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கிமினல் வழக்குகள் உள்பட எந்த வழக்கானாலும் கைது செய்யப்பட்டவர்கள், மாவட்ட அமர்வு (செஷன்ஸ்)நீதிமன்றத்தை அணுகிதான் ஜாமீன் கோருவர், அதுதான் மரபாகும். ஆனால் ஜெயேந்திரர் விஷயத்தில் இது தலைகீழாகமாறியுள்ளது.
நேரடியாக உயர்நீதிமன்றத்தை ஜெயேந்திரர் தரப்பு அணுகியுள்ளது.
இது தவறு என்று மூத்த வழக்கறிஞர்களில் சிலர் கூறினாலும், இது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் எனவேறு சில வழக்கறிஞர்கள் கூறினர்.
மேலும், வீட்டுக் காவல் கோரி ஜெயேந்திரர் தரப்பு கோரிக்கை விடுப்பதற்கும் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் அதிருப்திதெரிவித்துள்ளனர். ஜெயேந்திரருக்கு வீட்டுக் காவல் அளிக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும்அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications