சட்டசபை கூடியது: திமுக பங்கேற்கும்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் மற்றும்,தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த கூட்டத் தொடரை எதிர் கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்த நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடரில் திமுக நிச்சயம்பங்கேற்கும் என அக் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய ஆளுநர் பதவியேற்றுள்ள நிலையில், சங்கராச்சாரியார் கைது உள்பட தமிழகத்தில் படு பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்துவரும் சூழலில் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனால் சட்டமன்றக் கூட்டம் மிகப் பரபரப்பானதாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை கூட்டம் தொடங்கியதும் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன்உள்பட 5 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து கொண்டு வந்தார்.அவர்களுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர், இக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க சபாநாதர் காளிமுத்துவின்அறையில் அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்தில் சட்டமன்றத்தை வரும் 22ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நாளை இரண்டாவது துணை நிதி நிலை அறிககையை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்கிறார். 18ம் தேதி அதன்மீதான விவாதம் நடைபெறும். அன்று சில சட்ட முன் வடிவுகளும் அறிமுகம் செய்யப்படும்.
19ம் தேதி தொடர்ந்து விவாதம் நடைபெறும். 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் விடுமுறை நாட்களாகும். 22ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பொன்னையன் பதிலளிப்பார். அன்றே சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்படும்.
முதல் நாள் கூட்டத்தின் முடிவில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற துணைத் தலைவர்துரைமுருகன், ஜனநாயக முறைப்படி, சட்டப்படி சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்றால் அதில் திமுக நிச்சயம் பங்கேற்கும்.மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்புவோம் என்றார்.
இந்தக் கூட்டத் தொடரில், ஜெயேந்திரர் கைது விவகாரம், ஜெயலட்சுமி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகனைக் கிளப்ப எதிர்க்கட்சிகளும் வீரப்பன் கொல்லப்பட்டது, ஆளுநர் மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கிளப்ப ஆளும் கட்சியும்திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications