அமைதி காக்கும் தமிழகம்: கையை பிசையும் பாஜக

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

சென்னை:

கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவில்போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் எதிர்மாறான நிலை நிலவுகிறது.

காஞ்சி உள்பட மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் இந்தக் கைதுக்கு எதிராக போராட்டங்களோ பெரிய எதிர்ப்போ இல்லை.

சங்கராச்சாரியார் கைது என்றவுடன் முதலில் தமிழகத்தில் அதிர்ச்சி பரவியது. முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது வேலையைக்காட்ட ஆரம்பித்துவிட்டதாக முனுமுனுப்பு எழுந்தது. ஆனால், கொலைக்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் போலீஸ் அடுக்க,கைதுக்கு எதிராக எழுந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பும் அப்படியே அடங்கிவிட்டது.

அமைதி:

கைதுக்கு எதிராக தமிழகத்தில் வி.எச்.பி அழைப்பு விடுத்த பந்த் மற்றும் பாண்டிச்சேரியில் சிவசேனை நடத்திய பந்த் ஆகியவைபடுதோல்வி அடைந்துவிட்டன. இதனால் தமிழகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கும் யோசனையையே கைகழுவிட்டதுபா.ஜ.க.

இந்த விவகாரத்தை தமிழகத்தில் அரசியல்ரீதியாக பூதாகரமாக்குவதில் பா.ஜ.க தலைமையிலான அமைப்புகளுக்கு இதுவரைவெற்றி கிடைக்கவில்லை.

சங்கராச்சாரியார் கைது தொடர்பாக தமிழகம் அலட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து வருவது பா.ஜ.க, விஎச்பி, ஆர்எஸ்எஸ்,சிவசேனை, பஜ்ரங்தள், இந்து முன்னணி போன்ற அமைப்பினரை டென்சனாக்கியுள்ளது. எதிரும் புதிருமான இரு பலம் வாய்ந்தகட்சிகளான திமுகவும் அதிமுகவும் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட கைகோர்த்துக் கொண்டுவிட்டது டென்சனை மேலும்அதிகரித்து வருகிறது.

இந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றும் தெரியாமல் திண்டாடி வருகின்றன இந்த அமைப்புகள்.

கேரளத்தில் முழு ஆதரவு:

அதே நேரத்தில் கேரளா, ஆந்திராவில் பா.ஜ.க. மற்றும் பிற இந்து மத அமைப்புகள் நடத்திய போரட்டங்களுக்கு பெரும் ஆதரவுஇருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் நேற்று பா.ஜ.க. அழைப்பு விடுத்த பந்த்துக்கு மாநிலத்தின் தென் மாவட்டங்களில் முழு ஆதரவு இருந்தது. கடைகள்அனைத்தும் மூடப்பட்டிருந்தன, பஸ்கள் ஏதும் ஓடவில்லை. அதே போல ஆந்திராவில் நடந்த போராட்டங்களிலும் வடமாநிலங்களில் நடந்து வரும் போராட்டங்களில் ஏராளமான அளவில் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

பயத்தில் பாஜக:

ஆனால், பாண்டிச்சேரியில் சிவசேனை அழைப்பு விடுத்த பந்த் நடப்பதாக பத்திரிக்கைள், டிவி மூலமே மக்கள் அறிந்துகொண்டனர். அந்த அளவுக்கு பந்த்தே பந்தாகிவிட்டது. தமிழகத்தில் வி.எச்.பி நடத்திய பந்த்துக்கும் இதே கதி தான் ஏற்பட்டது.

இந்தக் கைதைக் கண்டித்து போராட்டமோ, பந்த்தோ நடத்தினால் அது தங்களது பலத்தை தோலுரித்துக் காட்டிவிடும் என்பதால்பா.ஜ.க. இதுவரை போரட்டம் எதற்கும் அழைப்பு விடுக்கவில்லை. அழைப்பு விடுக்கும் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந் நிலையில் நாளை உயர் நீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தைமுற்றுகையிடுவோம் என வி.எச்.பி. அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+