அப்ரூவராகிறார் விஜயேந்திரரின் தம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு துணையாக இருந்து திட்டம் தீட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் விஜயேந்திரரின்தம்பி ரகு அப்ரூவராக முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சங்கரராமன் கொலையில் கூலிப்படையை அமர்த்தியது முதல் வழக்கை திசை திருப்ப போலியாக 5 பேரை சரணடையச் செய்ததுவரை ஜெயேந்திரருக்கு உதவியாக இருந்ததாக ரகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

பெரும்பாலான குற்றங்களை அவர் ஒப்புக் கொண்டதால் அவரை போலீஸார் அப்ரூவராக்கி விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது.

இப்போது மடத்தில் இருக்கும் ரகுவிடம் நேற்றிரவு இரண்டு மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்புவின் கூட்டாளி சரண்

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கூலிப்படை தலைவன் அப்புவின் கூட்டாளி அம்பிகாபதி ஆலந்தூர்நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தான்.

அவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஆலந்தூர் நீதிபதி பரமராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவன் சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இதனால் சங்கரராமன் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 18 ஆகஉயர்ந்துள்ளது.

கைதானவர்களில் ஒருவனான கதிரவனின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவுடைகிறது. இதனையடுத்து அவன் இன்றுகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தமராஜன்உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கொலையை தாங்கள்தான் செய்ததாக பொய் கூறி சரண் அடைந்தவர்களின் காவலை அடுத்த மாதம் 1ம் தேதிவரை நீதிபதி நீட்டித்தார்.

அப்பு சரண்?

இதற்கிடையே கூலிப் படைத் தலைவனான அப்பு (50) ஆந்திர மாநிலம் நகரி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததாக தகவல்கள்வருகின்றன. ஆனாலும் இத் தகவல் இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அப்புவின் சொந்த ஊர் கேரளா. மலையாளியான இவன் மீது பல கடத்தல் வழக்குகள்உள்ளன. ஆனாலும் சங்கர மடத்துக்கு மிக நெருக்கமானவனாக இருந்து வந்தான். இவனது மகன் அமெரிக்காவில் படித்துவருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+