இன்றும் வழக்கறிஞர்கள்- ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மோதல்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றும் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த சனிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது வழக்கறிஞர்கள்,மக்கள் கலை மன்றத்தினர் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இன்றும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்ணணி அமைப்பினர் நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர்.அவர்களைவெளியேற்ற வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் ஊர்வலமாக வந்து கோஷம் எழுப்பினர். அப்போது இரு தரப்பினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்தனர். பின்னர் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் 25 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களில் காசியிலிருந்து வந்த ஒரு சாமியாரும் அடக்கம்.
இதற்கிடையே சங்கராச்சாரியாரை ஜாமீனில் விடக் கூடாது என்று நீதிமன்ற வளாகத்துக்குள் கோஷம் எழுப்பிய இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications