ஜெயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு: 6 பேர் கைது
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தின் முன் ஜெயேந்திரர் உருவ பொம்மையை எரித்த புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணியைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சீல் வைக்ககக்கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலைமுன்னணியைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் கலைந்து சென்றவர்களில் சிலர் விழுப்புரத்தில் சந்திரசேகரேந்திரர் பிறந்து வாழ்ந்த வீட்டில்கட்டப்பட்டுள்ள சங்கர மடத்தின் முன்பு கூடினர். அங்கு ஜெயேந்திரர் உருவ பொம்மை ஒன்றை எரித்தனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்டஒருங்கிணைப்பாளர் நடராஜன், சுதா, சீனிவாசன், செந்தமிழ், பாபு, மனோகர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications