ஜெயேந்திரரை சந்திக்க வருகிறார் பால் தாக்கரே
வேலூர்:
வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கராச்சாரியாரைச் சந்திக்க சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே வருகிறார்.
இச் சந்திப்புக்கு அவருக்கு போலீஸ் அனுமதி தரப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியாவும் சங்கராச்சாரியாரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால்,அவருக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை.
நேற்று சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டுத் திரும்பிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
இத்தனை ஆண்டுகளாக சங்கராச்சாரியார் செய்து வந்த நல்ல காரியங்களை எல்லாம் இந்தக் கைதின் மூலம் ஒரு மணி நேரத்தில்மண்ணோடு மண்ணாக்கிவிட்டது தமிழக போலீஸ். அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் இந்தக் கைது நடந்துள்ளது. மனிதஉரிமை மீறலும் இதில் உண்டு என்றார்.
ஜெயேந்திரரை சந்தித்துவிட்டுத் திரும்பிய முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இந்தக் கைதுஒருதலைப்பட்சமானது. சமீபத்தில் ஒரு மூத்த அரசியல்வாதி (திமுக தலைவர் கருணாநிதி) சட்டத்தை பா.ஜ.க. மதித்து நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டத்தால் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அந்த வகையில் ஜெயேந்திரரும்நிரபராதியே என்றார்.
பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க சங்கராச்சாரியாரோ நாங்களோமுயலவில்லை. இநத் விஷயத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவற்றின் நிலைப்பாடு உலகறிந்தது தான்.
கூட்டணி நிர்பந்தத்தால் காங்கிரஸ் வாய்மூடி மெளனமாக உள்ளது. நீதி வெல்லும்.
சங்கராச்சாரியாரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவரிடம் தொடர்ந்து விசாரிக்க விரும்பினால் தனி வீட்டில் வைத்துவிசாரிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications