விஜயேந்திரருடன் பெர்ணான்டஸ் சந்திப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரரை தேசிய ஐனநாயக கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்இன்று சந்தித்துப் பேசினார்
இன்று காஞ்சி மடத்திற்கு சென்ற பெர்ணான்டஸ் அங்கு விஜயேந்திரரை சந்தித்துப் பேசினார். 30 நிமிட சந்திப்பிற்குப் பின்னர்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. இந்தக் கைது முழுக்க முழுக்க மனித உரிமைமீறலாகும். இந்தக் காரணமானவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
காஞ்சி மடத்தில் நடந்த சோதனையில் என்ன கிடைத்தது என்பதை போலீஸார் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஜனநாயக் கூட்டணி எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாது.
ஜெயேந்திரர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு பலமான ஆதாரங்கள் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதுகுறித்து கருத்து ஏதும் கூற நான் விரும்பவில்லை.
இந்த கைதினால் நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் ஆழ்ந்த மனவருத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். விரைவில்இந்த வருத்தம் நீங்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications