ஆபாச பாடல்கள்: சட்டசபையில் விவாதம்
சென்னை:
தமிழ் சினிமாக்களில் ஆபாச பாடல் வரிகள் இடம் பெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டசபையில்பாமக கோரிக்கை விடுத்தது.
கேளிக்கை வரி சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தில் பா.ம.க. எம்எல்ஏ ஜிகே மணி கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய திரைப்படங்களில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. வன்முறையும், பெண்களை இழிவுபடுத்துவதும்அதிகரித்துவிட்டது. கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா.. இல்ல ஓடிப் போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்றும்சின்ன வீடா வரட்டுமா என்றும் பாடல்கள் வருகின்றன. கேட்டால் வேதனையாக உள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் பொன்னையன், இதை சென்சார் போர்டு நினைத்தால் தடுத்துவிடலாம். இதனால் இதை அங்குபோய் வலியுறுத்தலாமே? என்றார்.
தொடர்ந்து மணி பேசுகையில், நாங்கள் சென்சார் போர்டிடமும் வலியுறுத்தத் தான் செய்கிறோம் என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் பேசுகையில், திரைப்படத்துறையை ஊக்குவிப்பதற்காக பல சலுகைகளை முதல்வர்அறிவித்துள்ளார். தியேட்டர்களுக்கு பல வரிச் சலுகைகள் கொடுத்தும் கூட கட்டணங்கள் குறையவில்லை.
தியேட்டரில் நுழையும்போது ஏசி போடுகிறார்கள். பின்னர் நிறுத்தி விடுகிறார்கள். பல தியேட்டர்களில் நாற்காலிகள் உடைந்துபோய் இருக்கின்றன. வரிச் சலுகைகளால் பலனடைந்துள்ள தியேட்டர் முதலாளிகள் பொது மக்களுக்கு அந்தப் பலனை தரவேண்டும். தியேட்டர்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றார்.
திருட்டு விசிடி:
திருட்டு விசிடி தயாரிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் தமிழக சட்டத் திருத்தம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
கள்ளச் சாராயம், ரெளடியிசம், விபச்சாரம், போலி மருந்து தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் திருட்டு விசிடி கும்பலையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்வதற்கான சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications