மடத்தில் அதிகாரப் போட்டி இல்லை: நிர்வாகி
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்தில் அதிகாரப் போட்டி ஏதும் இல்லை என மூத்த நிர்வாகி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து காஞ்சி மடத்தின் செய்தித் தொடர்பாளரும் மூத்த நிர்வாகியுமான சங்கரன் நிருபர்களிடம் பேசுகையில்,
காஞ்சி மடத்தில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், பெரியவரிடம் இருந்து இளையவர் அதிகாரத்தைக் கைப்பற்றமுயல்வதாகவும் கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை. இவையெல்லாம் திரிக்கப்பட்ட செய்திகள்.
இந்தக் கைதினால் மடத்துக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து வெற்றிகரமாக வெளியில் வருவோம். இளையவரை காஞ்சிமடாதிபதியாக்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை.
தனக்கு அடுத்து யார் மடாதிபதியாக வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டிதும் பெரியவர் தான் என்றார் சங்கரன்.
இந்தக் கொலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்குஇளையவர் விஜயேந்திரர் கடிதம் எழுத, அப்படி விசாரணை ஏதும் தேவையில்லை என்று கூறியதும் இதே சங்கரன் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications