கொலை வழக்கில் பாமக எம்எல்ஏ சரண்
கடலூர்:
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பண்ருட்டி தொகுதி பா.ம.க. எம்எல்ஏ வேல் முருகன் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துஜாமீன் பெற்றார்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பா.ம.கவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.இதையடுத்து சில வாரங்களில் அவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் எம்எல்ஏ வேல்முருகன் உள்ளிட்டோருக்குதொடர்புள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூர் எஸ்.பியாக மாற்றலாகி வந்த காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் (சங்கராச்சாரியார் கைதில் முக்கிய பங்காற்றியவர்)வேல்முருகனை கைது செய்ய முனைந்தார். இதையடுத்து வேல்முருகன் தப்பியோடி தலைமறைவானார். அவர் டெல்லியில்பா.ம.க. மத்திய அமைச்சர்களின் உதவியோடு பதுங்கியிருப்பதாக போலீசார் கூறினர்.
இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் வேல்முருகன். இதையடுத்து அவருக்குநிபந்தனை ஜாமீன் கிடைத்தது.
அதன்படி கடலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொண்டு கோவையில் தங்கியிருந்து தினமும்நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வேல்முருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியில் தலைகாட்டினார் வேல்முருகன். இந் நிலையில் இன்னொரு வழக்கில் அவகைக் கைது செய்ய போலீசார்திட்டமிட்டனர். இதையடுத்து அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் வேல்முருகன்.
இதைத் தொடர்ந்து கடலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, வெங்கடேசன் கொலை வழக்கில் கோவையிலும் இன்னொரு வழககில் சென்னையிலும்கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications