போலீஸ் மீது சு.சுவாமி பாய்ச்சல்: ஜெவுக்கு ஆதரவு
சென்னை:
ஜெயேந்திரர் கைது விஷயத்தில் போலீசார் மீது கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி. அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்துள்ளார்.
வழக்கமாக காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும் ஒத்தே வராது. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோதுஅவரிடம் உள்ள தனது செல்வாக்கை வைத்து காஞ்சி மடத்துக்கு பல வகைகளிலும் சுவாமி தொல்லை தந்து வந்ததாகஜெயேந்திரரே குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந் நிலையில் சங்கராச்சாரியார் கைது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய சுவாமி கூறியதாவது:
ஜெயேந்திரர் நேபாளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் செல்ல முயற்சித்தார் என்று கூறுபவர்களுக்கு சட்டம் தெரியவில்லை.இந்திய வான்வெளி போக்குவரத்துத் துறையின் அனுமதியின்றி எந்த விமானமும் இந்திய வான்வெளியில் பறக்க முடியாது. மீறிபறக்கும் விமானங்களை சுடும் அதிகாரம் இந்திய விமானப் படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்படி எந்த அனுமதியும் அந்த ஹெலிகாப்டருக்கு தரப்பட்டதாகத் தெரியவில்லை.
ஜெயேந்திரர் கைது தேவையற்ற ஒரு நடவடிக்கை மட்டுமல்ல, அவசரமானதும் கூட. தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிமுதல்வர் ஜெயலலிதாவை போலீஸார் நம்ப வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். போலீசார் ஆதாரம் இருப்பதாகக்கூறும்போது ஜெயலலிதா என்ன செய்ய முடியும்?. போலீசார் எப்போதுமே எதையும் ஏற்றித் தானே சொல்வார்கள்.
ஜெயேந்திரர் குற்றவாளியா இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும். தீர்ப்பிற்கு முன்னரே ஜெயேந்திரரைக்குற்றவாளி என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காஞ்சி காமகோடி பீட மருத்துவமனை விவகாரத்தில் ஜெயேந்திரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைக் கைதுசெய்ய ஜெயலலிதா உத்தரவிட்டார் என்று நான் கருதவில்லை.
பொதுவாக சொத்துக்கள் வாங்குகிற விவகாரங்களை சசிகலாதான் பார்த்துக் கொள்வார். எனவே அவருக்கு வேண்டுமானால்ஜெயேந்திரருடன் பிரச்சினை இருந்திருக்கலாம்.
குற்றச்சாட்டு இருப்பதால்தான் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார் என்றால், சந்திரலேகா மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றவாளிசுக்லா, சசிகலா சொல்லித்தான் ஆசிட் வீசினேன் என்று கூறினாரே. அப்போது சசிகலாவை ஏன் கைது செய்யவில்லை?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்வதே தவறு. எல்லோரும் சமம் என்றால் ஏன் சிறையில் ஏ கிளாஸ் எல்லாம்வைத்திருக்கிறார்கள்? என்றார் சுப்பிரமணியம் சுவாமி.












Click it and Unblock the Notifications