அப்புவின் கூட்டாளி காதுகுத்து ரவி கைது
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாகிவிட்ட தாதா அப்புவின் முக்கியக் கூட்டாளியான காதுகுத்து ரவி கைதுசெய்யப்பட்டுள்ளான். (ரொம்ப பொய் பேசுவான் என்பதால் இந்தப் பட்டப் பெயராம்)
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த இவன் அப்புவின் கார் டிரைவராக இருந்தவன். இவன் மீது 3 கொலை, 8 கொலைமுயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன.
4 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி 4 ஆண்டுள் சிறையில் இருந்த இவன், சங்கரராமன் கொலையை அடுத்து அப்புவைப்போலவே தலைமறைவானான்.
இவனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பீர் முகம்மது தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார், நேற்றிரவு பாரிமுனைபர்மா பஜாரில் ஒரு கடையில் வைத்து இவனை சுற்றி வளைத்தனர். அப்பேது, தப்பியோடிய இவனை போலீசார் சேஸ் செய்துதான் பிடித்தனர்.
இவனை மீண்டும் குண்டர் சட்டத்தில் உள்ளே போட உத்தரவு பிறப்பித்தார் கமிஷ்னர் நடராஜ். இதையடுத்து சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ள இவனிடம், உள்ளேயே வைத்து அப்பு மற்றும் சங்கரராமன் கொலை குறித்து விசாரணை நடத்திவருகிறது போலீஸ்.
அப்புவை நெருங்கியது போலீஸ்:
இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான அப்புவை போலீசார் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தலைமறைவாக உள்ள அவன், நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக போக்குக் காட்டி வருகிறான். இந் நிலையில் அவனுக்குசென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் தான் அடைக்கலம் தந்துள்ளதாகவும், ஆந்திராவில் அவருக்குச்சொந்தமான ஒரு இடத்தில் தான் அவன் பதுங்கியிருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர்.
இதனால் 3 சிறப்புப் படைகள் ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. விரைவில் அவன் பிடிபடுவான் என்கிறதுபோலீஸ்.
இதே போல கொலையாளிகளுக்கு சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி ரூ. 15 லட்சம் பட்டுவாடா செய்த காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியத்தையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போலீசாரிடம் சிக்காமல் நீதிமன்றங்களில் சரணடைய அப்புவும் ரவியும் முயன்று வருவதாகத் தெரிகிறது.
அண்ணாநகர் ரமேஷ் சாவில் தொடர்பு:
இந்த அப்புவுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அண்ணாநகர் ரமேஷின் குடும்பத்தின்மர்மச் சாவிலும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications