2வது நாளாக டெல்லியில் பாஜக உண்ணாவிரதம்
டெல்லி & சென்னை:
சங்கராச்சாரியாரை போலீஸ் காவலில் அனுப்பியதைக் கண்டித்து டெல்லியில் பா.ஜ.க. இன்று இரண்டாவது நாளாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
நேற்றைய உண்ணாவிரதத்துக்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி தலைமை தாங்கிய நிலையில், இன்றைய போராட்டத்துக்குமுரளிமனோகர் ஜோஷி தலைமை தாங்கினார். அவருடன் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் உள்பட ஏராளமானபா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் தொண்டர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஜனைப் பாடல்களைப் பாடியபடி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
சங்கராச்சாரியார் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதால் 3 நாள் தர்ணா, உண்ணாவிரதத்துக்கு திட்டதாகவும், அவரைமேலும் போலீஸ் காவலில் வைக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ள நிலையில், அதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில், தங்களதுபோராட்டமும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
நாளை டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தர்ணாவுக்கு தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில் நாளை அத்வானிசென்னையில் போராட்டம் நடத்தவுள்ளார்.
மனிதச் சங்கிலி:
இதற்கிடையே ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி ஆகியவற்றைச்சேர்ந்த தொண்டர்கள் கோவில்கள் முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள கோவில்கள் முன் பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலி அமைத்துப்போராட்டம் மேற்கொண்டனர். இதில் பெண்கள் கருப்புச் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர்வடிவுடையம்மன் கோவில், பாடி படவேட்டம்மன் கோவில், தாம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய கோவில்கள்,இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர், எச்.ராஜா உள்ளிட்டோர் இந்தப்போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஆந்திரா, கர்நாடகத்திலும்:
இதே போல ஆந்திரம், கர்நாடகத்திலும் இன்று மாநில பா.ஜ.க. தலைவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications