20 ஆண்டுக்கு முன் சங்கர மடத்தில் நடந்த 2 மர்ம சாவுகள்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

காஞ்சி சங்கர மடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து இப்போது சர்ச்சைஎழுந்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கர மடத்துடன் தொடர்புடையபழைய வழக்குகள் தோண்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு 2 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்த அவர்களது சகோதரர் இப்போதுசர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த நாராயண நம்பூதிரி என்பவர் கூறியதாவது:

எனது சகோதரர் கேசவன் மற்றும் அவரது நண்பர் சங்கரன் ஆகியோர் காஞ்சி சங்கர மடத்தில் தங்கி வேதம் படித்து வந்தனர். கடந்த 1985ம்ஆண்டு அக்டோபர் மாதம் கேசவன், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக எங்களுக்குத் தகவல் தெவிக்கப்பட்டது.

பதறி அடித்துப் போன நாங்கள் கேசவனின் ஆணுறுப்பிலும் கழுத்திலும் காயம் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு மடத்தில் என்னநடந்தது என்று கேட்டோம். ஆனால், எங்களுக்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. போலீஸாரை அணுகியும் ஒன்றும் நடக்கவில்லை.

கேசவன் இறந்த சில நாட்களிலேயே சங்கரன், திருச்சூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.காஞ்சியில் இருந்து அவர் எப்போது திருச்சூர் வந்தார்?, அவரை யார் கொன்றது? காஞ்சியிலேயே கொல்லப்பட்டு திருச்சூரில் ரயில்தண்டவாளத்தில் எறியப்பட்டாரா என்று தெரியவில்லை.

இருவரது மரணங்களும் எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டன. இப்போது கொலை வழக்கில் சங்கராச்சாரியார் சிக்கியிருப்பதைப்பார்த்தால், இந்த இருவரது மரணத்திலும் மர்மம் இருப்பதாகவே இப்போது எங்களுக்குத் தோன்றுகிறது.

தற்போது நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு மனுகொடுக்கவுள்ளேன் என்றார் நம்பூதிரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+