ரோஜா வீட்டில் குண்டு புரளி
பூந்தமல்லி:
நடிகை ரோஜா வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது. சோதனைக்குப் பின் அது வெறும் புரளி எனத்தெரிந்தது.
சென்னை விருகம்பாக்கம் அப்பு சாலையில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் வீடு உள்ளது. இவரது தம்பிக்கு இன்று அண்ணாநகரில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்கள் அவரது வீட்டில் குழுமியிருந்தனர்.
செல்வமணியின் மனைவி ரோஜாவிற்குச் சொந்தமான வீடு வளசரவாக்கம் ஜானகி நகர், சரஸ்வதி தெருவில் உள்ளது. இந்த 2வீடுகளுக்கும் தொலைபேசியில் ஒரு மிரட்டல் வந்தது.
தொலைபேசியில் பேசிய மர்ம மனிதன் தான் யார் என்பதைத் தெரிவிக்காமல், 2 வீடுகளிலும் வெடிகுண்டு வைத்துஇருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறினான்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வளசரவாக்கம் போலீஸார் இரண்டுவீடுகளையும் சோதனை செய்தனர். சோதனையில் குண்டு எதுவும் இல்லை; அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications