காதல் கோட்டை"!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப் பிரிவில் பணியாற்றும் ஆண், பெண்காவலர்கள் இருவர் செல்போனைத் தூக்கிப் போட்டு, கொஞ்சி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பொது மக்கள் மனுக்கள்கொடுப்பது வழக்கம். இங்கு பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் இங்கு ஒரு பெண் காவலரும், இன்னொரு ஆண் காவலரும் செல்போனைத் தூக்கிப் போட்டபடிஜாலியாக கடலை போட்டுக் கொண்டு, கொஞ்சி விளையாடியுள்ளனர். இதை பொது மக்கள் சிலரும் பார்த்துள்ளனர்.

மேலும், கோட்டையில் நடந்த இந்த காதல் காட்சியை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும்பார்த்துவிட்டார். உடனே கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு, இந்தக் காட்சியை வீடியோ எடுக்கவும் கூறியுள்ளார்.

கோட்டையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்கள், இந்த போலீஸ் ஜோடி பக்கம் திருப்பப்பட்டு, காதல்விளையாட்டு அப்படியே ரெக்கார்டும் செய்யப்பட்டு மேலிடத்திற்கு அனுப்ப்பட்டுவிட்டது.

இதைப் பார்த்து உள்துறை அமைச்சக அதிகாரிகளும் உயர் போலீஸ் அதிகாரிகளும் டென்சனாகிவிட்டதாகத் தெரிகிறது.

முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இனிமேல் பெண் காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவே வேண்டாம் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+