போலீஸ் காவல் நீடிப்பில்லை: மீண்டும் சிறையில்..

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் & சென்னை:

சங்கராச்சாரியாரின் போலீஸ் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதே போல 3 நாள் போலீஸ் காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்றுதள்ளுபடி செய்யப்பட்டது. (இந்தக் காவல் முடிவடைந்துவிட்ட நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது).

சங்கராச்சாரியாரின் 3 நாள் காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் உத்தமராஜன் முன்ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர்,

போலீஸ் காவலில் சங்கராச்சாரியார் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தார். அவரிடம் வங்கிக் கணக்குகள் குறித்து மேலும்விசாரணை நடத்த வேண்டியுள்ளது. நேற்று வங்கி விடுமுறை என்பதால் அந்த விசாரணையை நடத்த முடியவில்லை. இதனால்அவரை நாளை பகல் 2 மணி வரை போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது சங்கராச்சாரியார் பக்கம் திரும்பிய நீதிபதி உத்தமராஜன், இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

பதிலளித்த சங்கராச்சாரியார், என்னிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ அதையெல்லாம் கேட்டுவிட்டார்கள். இனியும்அவர்கள் என்னிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றார்.

கடந்த 3 நாட்களாக உங்களை போலீசார் துன்புறுத்தினார்களா? என்று நீதிபதி கேட்டபோது, அப்படியெல்லாம் ஏதும்செய்யவில்லை என பதிலளித்தார்.

போலீஸ் காவலில் உங்கள் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டதா என்று கேட்டபோது, ஒரு நாளைக்கு 3 முறை டாக்டர்கள் என்னைபரிசோதனை செய்தார்கள் என்று சங்கராச்சாரியார் பதிலளித்தார்.

இதையடுத்துப் பேசிய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்களான தியாகராஜன், தினகரன் ஆகியோர், வங்கிக் கணக்கு குறித்துவிசாரணை நடத்த சங்கராச்சாரியாரும் போலீசாரிடம் இருக்க வேண்டிய அவசியமேயில்லை. வங்கியில் போய் போலீசாரேநேரடியாக விசாரித்துக் கொள்ளலாம் என்றனர்.

இதையடுத்து போலீஸ் காவலை நீட்டிகக் கோரும் அரசின் மனுவை நிராகரித்த நீதிபதி உத்தமராஜன், சங்கராச்சாரியாரைவிசாரிக்க போலீசாருக்கு போதுமான அவகாசம் தரப்பட்டாகிவிட்டது, இதனால் மேலும் அவரை போலீஸ் காவலில் வைக்ககோருவதை ஏற்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து சங்கராச்சாரியார் மீண்டும் வேலூர் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயேந்திரர் மனுவும் தள்ளுபடி:

இதற்கிடையே, 3 நாட்களுக்கு முன் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

போலீஸ் காவலே முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த மனுவை ஏ.கே.ராஜன் விசாரித்து வந்தார். தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். இந் நிலையில், இன்று வழங்கியதீர்ப்பில்,

போலீஸ் காவலை எதிர்க்கும் சங்கராச்சாரியாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜெயேந்திரருக்கு போலீஸ் காவல்கொடுக்கப்பட்டது செல்லும். இதுதொடர்பான காஞ்சிபுரம் நீதிமன்றத்தின் உத்தரவில் விதிமீறல், தவறு இல்லை.

மேலும் சங்கராச்சாரியார் மீண்டும் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டால், அவரது வழக்கறிஞரும் உடனிருக்கலாம். ஆனால்விசாரணையில் குறுக்கிடக் கூடாது, இடையூறு செய்யக் கூடாது.

போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயேந்திரர் இருக்கும்போது அவரை மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை சந்தித்துப் பேசலாம் என்றுதனது தீர்ப்பில் கூறினார்.

தீர்ப்பை திருத்திய நீதிபதி:

இந்தத் தீர்ப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் ஒரு திருத்தத்தை நீதிபதி வெளியிட்டார். அதில், போலீஸ் காவலில்சங்கராச்சாரியாரிடம் விசாரணை நடக்கும்போது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்பதை மாற்றிய நீதிபதி, வழக்கறிஞர்உடனிருக்க அனுமதி இல்லை என்று அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+