சங்கரராமன் குடும்பத்திற்கு ஜெ. 5 லட்சம் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் ஜெயலலிதா கூறியதாவது:
கடந்த செப்டம்பர் 3ம் தேதி சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பின், தனது குடும்பம் வறுமையில்வாடுவதாகவும், குழந்தைகளின் படிப்பைத் தொடர முடியவில்லை என்றும் கூறி, தங்களுக்கு நிதியுதவி அளிக்குமாறுசங்கரராமனின் மனைவி பத்மா கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்திரவிட்டுள்ளேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications