ஜெவுக்கு ஆண்டவன் நல்ல புத்தி தரட்டும்: அத்வானி
சென்னை:
![]() |
சங்கராச்சாரியார் கைதை எதிர்த்து சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் அத்வானிபேசியதாவது:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது போலீசாரிடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக செய்திகளைப் பரப்பிவிட்டது தமிழகஅரசு. இதனால் திகைத்துப் போனோம். ஆனால், இப்போது தான் தெரிகிறது, உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இதனால் அவர் விரைவில் விடுதலை ஆவார். இந்த கைது சம்பவத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியவரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. இது தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல் அல்ல, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டஒரு மதச் சின்னத்தின் மீதான தாக்குதல்.
அவர் கைது செய்யப்பட்ட விதம், அதன் பின்னர் அவர் நடத்தப்பட்ட விதம் அனைத்தும் மன வலியைத் தந்துவிட்டன. எனது 50 ஆண்டு பொது வாழ்வில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. நம்மை ஆண்டவெள்ளைக்காரன் கூட மதத் தலைவர்களை இப்படி நடத்தியதில்லை.
அரசியல் எதிரிகளைக் கூட யாரும் இப்படி நடத்தியதில்லை. அவ்வளவு மோசமாக ஜெயேந்திரர் நடத்தப்பட்டுள்ளார். அதைநினைத்தால் வேதனையாக உள்ளது. வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு தலைவராக இருந்தால் அவரை இப்படி நடத்த முடியுமா?நடத்தியிருப்பார்களா?
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும், ஆனால், யாரையும் கேவலப்படுத்த யாருக்கு உரிமை இருக்கிறது. பிரிட்டிஷ்ஆட்சியாளர்கள் கூட மதத் தலைவர்களை இப்படி நடத்தியதில்லையே.
எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்துள்ள மிக மோசமான சம்பவமாகவே நான் இதைக் கருதுகிறேன். அப்போது மக்கள் கொடுத்ததீர்ப்பை யாரும் மறந்துவிடக் கூடாது. சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தது போல மக்கள் இந்திரா காந்திக்கு எதிராகவாக்களித்தார்கள்.
இப்போதும் ஜெயேந்திரரின் கைதால் நாடே கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
ஜெயலலிதாவுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார் அத்வானி.
முன்னதாக வேலூர் சிறையில் ஜெயயேந்திரரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், பொது மக்களின் கருத்தோடு, அரசு,நீதித்துறையின் கருத்தும் ஒத்துப் போயிருக்குமானால் இந்தக் கைதை தவிர்த்திருக்க முடியும். கைது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடப் போவதில்லை என்று ஜெயேந்திரர் கூறிவிட்டார் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications