ஜெயேந்திரர்: ஹேபியஸ் கார்பஸ் சிக்கலில் வழக்கறிஞர்
சென்னை:
ஜெயேந்திரரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தவருக்கு நீதிபதிகள் கடும்கண்டனம் தெரிவித்தனர்.
வில்பிரட் பிரகாஷ் என்ற வழக்கறிஞர் தன்னை ஜெயேந்திரன் நண்பர் என்று கூறிக் காண்டு ஹேபியஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு)மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக் குமார் ஆகியோர் பிரகாஷுக்கு கடும் கண்டனம்தெரிவித்தனர்.
நீதிபதிகள் பேசுகையில்,
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குவிசாரணைகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந் நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி ஹேபியஸ்கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஹேபியஸ் கார்பஸ் மனு எதற்காக என்ற அர்த்தத்தையே மனுதாரர் புரிந்து கொள்ளவில்லை, அதைக் கேலி செய்யும் விதத்தில்நடந்து கொண்டுள்ளார்.
இதுபோன்ற நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வேலையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அனுமதிக்கவும்முடியாது. இதனால், சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஆகும் செலவுகள் முழுவதையும் மனுதாரரிடமிருந்து வசூலிக்கமுடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று நீதிபதிகள்தெரிவித்தனர்.
நீதிபதிகள் இவ்வாறு கூறியதும், தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும், வழக்கு செலவுகளை வசூலிப்பது என்ற முடிவைமறு பரிசீலனை செய்யுமாறும் கோரினார் பிரகாஷ். ஆனால் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை நாளை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications