Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் அரிதாரம்: இல.கணேசன் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்துத்துவத்தைக் காப்பாற்றுவது போல நடித்து எங்களை எல்லாம் ஜெயலலிதா ஏமாற்றிவிட்டார் என பாஜக பொதுச் செயலாளர்இல.கணேசன் கூறினார்.

சென்னை பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

சங்கராச்சாரியாரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் இந்தக் கைதே நடந்ததோ என்ற சந்தேகம்வருகிறது. இந்துத்துவாவைக் காப்பது போல ஜெயலலிதா நடித்தார். நாங்களும் மயங்கிப் போனோம்.

ஆனால், இப்போது உண்மை தெரிந்துவிட்டது. இந்துத்துவத்துக்காக பாஜக எடுத்தது அவதாரம். ஜெயலலிதா போட்டதுஅரிதாரம்.

ஜெயேந்திரர் மீது விழுந்த அடி இந்துக்கள் மீது விழுந்த அடி. இதனால் தான் ஒருவர் மாரடைப்பாலும் ஒருவர் விஷம் குடித்தும்இறந்துள்ளார்கள். இது தவறு. தற்கொலை தவறு.

இந்த அரசுக்கு எதிராக உண்ணாவிரதமே கூட தேவையில்லை. நன்றாக சாப்பிடுவோம், வாழ்வோம், போராடுவோம் என்றார்.

வெங்கையா நாயுடு:

முன்னாள் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,

உலகில் எங்கும் நடக்காத சம்பவம் இங்கு நடந்துள்ளது. இந்து மதத் தலைவரைத் தவிர வேறு யாரையும் இப்படி நடத்தியிருக்கமுடியாது.

சங்கராச்சாரியாரைக் கைது செய்ய தனி விமானத்தில் போலீஸ் கமாண்டோ படையை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களிடம்ஏகே-47 துப்பாக்கிகள். மதத் தலைவரைக் கைது செய்ய ஏகே-47 துப்பாக்கியா?.

சங்கராச்சாரியாரை அரசு வழக்கறிஞர் கிரிமினல் என்கிறார். என்ன அநியாயம் இது.

ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட காந்தி, நேரு கூட வீட்டுக் காவலில் தானே வைக்கப்பட்டார்கள். அத்வானி, லாலு கூடவீட்டுக் காவலில் தான் வைத்தார்கள்.

வீரப்பனையே பிடித்திருந்தாலும் கூட அவனை வீட்டுக் காவலில் தான் வைத்திருப்பார்கள்.

லட்சக்கணக்கான மக்களால் கடவுளாக மதிக்கப்படும மகானை நடத்தும் விதமா இது?. நீதிமன்ற விசாரணைக்குப் பின் அவர்நிரபராதி என்று தீர்ப்பு வந்தால், அவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு யார் பரிகாரம் தேடுவது?

இந்தக் கைது நடந்தும் கூட மடம் அமைதி காக்கிறதே. இந்து மக்கள் அமைதியாக இருக்கிறார்களே என்று கேட்கிறார்கள்.பஸ்களைக் கொளுத்துவது, கல்வீசுவது போன்ற வன்முறைகள் வேண்டும் என்று விரும்புகிறார்களா?

இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்கவே இல்லை. அதை விரும்பும் இல்லை. இது கொள்கைப் போர். அநீதிக்கு எதிரானயுத்தம். கடவுள் எங்கள் பக்கம். நிச்சயம் வாய்மையே வெல்லும்.

பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டதையும் செய்தியாக்கக் கூடாது.எப்படி கிருஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புனித பூமியோ, இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படியோ அப்படித்தான்இந்துக்களுக்கும் காஞ்சி மடம் புனித பூமி.

அதன் மாண்பு கெடுவதை அனுமதிக்க முடியாது என்றார் நாயுடு.

ராதாகிருஷ்ணன்:

தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

சங்கராச்சாரியாருக்காக சட்டம் வளையாது என்றால் இனி இந்த நாட்டில் யாருக்காகவும் வளையக் கூடாது. சேரிக்கும் சென்றமுதல் துறவி ஜெயேந்திரர்.

ஆட்சிக் கட்டிலில் இருந்து அம்மையாருக்குச் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் உகிய நேரத்தில் பதிலடி தருவார்கள். இந்துக்களின்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் காரணம், நம்மிடம் ஓட்டு வங்கி இல்லாதது தான் என்றார்.

திருநாவுக்கரசர்:

முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பேசுகையில்,

இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களும் கூட ஜெயேந்திரர் கைதை எதிர்க்கத் தான் செய்கிறார்கள்.எப்.ஐ.ஆரில் கூட ஜெயேந்திரர் பெயர் இல்லை. கொலை நடந்த 2 மாதத்தில் அவர் மீது ஜெயலலிதாவுக்கும் போலீசுக்கும்சந்தேகம் வந்தது எப்படி?

சுவாமியிடம் ஜெ என்ன கேட்டார்? சுவாமிகள் எதைத் தர மறுத்தார்? என்ற விவரங்கள் எல்லாம் வெளியில் வரஆரம்பித்துவிட்டன. கலைஞரும் இப்போது இதில் சந்தேகம் கிளப்புகிறார்.

ஜெயலலிதாவுக்கு விபரீத புத்தி. விநாசகாலே விபரீத புத்தி. மக்களவைத் தேர்தலில் 40லும் தோற்ற ஜெயலலிதாவுக்குசட்டமன்றத் தேர்தலிலும் மரண அடி நிச்சயம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+