சிபிஐயிடம் திட்டு வாங்கிய ஜெயலட்சுமியின் உறவினர்!
மதுரை:
மதுரையில் நடந்து வரும் சிபிஐ விசாரணையின்போது அழைப்பே இல்லாமல் ஜெயலட்சுமியின் உறவினர் ஆஜரானதால்பரபரப்பு ஏற்பட்டது.
அழைப்பு இல்லாமல் வரக் கூடாது என்று சிபிஐ அதிகாரிகள் அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
போலீசார் மீது சரமாரியாக பாலியல் புகார்களை அடுக்கியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரையில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.
தற்போது ஜெயலட்சுமி குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர குற்றம் சாட்டப்பட்டுள்ளகாவல்துறையினடமும் விசாரணையை ஆரம்பித்துவிட்டது சிபிஐ.
இந் நிலையில் இன்று காலை நாராயணசாமி என்பவர் சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார். விசாரணைக்கு அவருக்கு சிபிஐ அழைப்புஅனுப்பாத நிலையில் அவராகவே விசாரணைக்கு வந்திருந்தார்.
அலுவலகத்திற்குள் சென்ற அவரிடம், நீங்கள் எதற்காக வந்தீர்கள், உங்களை விசாரணைக்கு அழைக்கவில்லையே, யார்உங்களை இங்கே அனுப்பியது என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் என்பவர் மிகக் கடுமையாகக் கேட்டார். பின்னர்அவருக்கு டோஸ் தந்து, கெட்-அவுட் சொல்லி வெளியேற்றினார்.
இதனால் கோபத்துடன் வெளியே வந்தார் நாராயணசாமி. அவரிடம் விசாரணை நடக்கவில்லையா என்று நிருபர்கள்கேட்டபோது, ஆபாசமாக திட்டியபடியே அங்கிருந்து சென்று விட்டார் நாராயணசாமி.
சிபிஐ அதிகாரிகளிடம் செம திட்டு வாங்கியிருப்பார் போலிருக்கிறது!!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications