30 பேர் பலியா?: புலிகள் இயக்கம் மறுப்பு
கொழும்பு:
மட்டக்களப்பில் கருணா தரப்பினர் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 30க்கும் மேற்பட்ட புலிகள் பலியானதாக வந்துள்ளசெய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இனப் போரில் உயிர்நீத்த புலிகளின் நினைவாக மாவீரர் வாரத்தை அந்த இயக்கம் அனுசரித்து வரும் நிலையில், கண்ணிவெடித்தாக்குதலில் 30 பேர் பலியானதாக இலங்கை ராணுவமும் கருணா தரப்பினரும் கூறியுள்ளனர்.
இதை மறுத்துள்ள புலிகள் இயக்கம், மாவீரர் தினத்தை இருட்டடிப்பு செய்ய ராணுவம் செய்யும் மோசடிப் புரளி இது என்றுகூறியுள்ளது.
மட்டக்களப்பில் சில விடுதலைப் புலிகள் சென்ற டிராக்டர் கிரனைட் குண்டின் மீது ஏறியதாகவும், அந்த இடத்தை டிராக்டர் கடந்தசில வினாடிகள் கழித்தே அது வெடித்ததாகவும், இதில் ஒரு விடுதலைப் புலி மட்டும் லேசான காயமடைந்ததாகவும் அந்தஇயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கூறியுள்ளார்.
இந்த சின்ன விபத்தைத் தான் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக திசை திருப்ப முயல்கிறது இலங்கை ராணுவம் என்றார்.
இதற்கிடையே மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கருணாவின் பெயரில் இலங்கை ராணுவத்தினர் துண்டுப் பிரசுரங்களைபோட்டுள்ளனர். அதில் மாவீரர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் இந்தப் பிரசுரங்களை மட்டக்களப்பில் ராணுவம் போட்டதாகத் தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications