ஜெயலலிதாவுக்கு தொகாடியா 1 வாரம் கெடு
டெல்லி:
சங்கரராமன் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் தந்து, அதன் மூலம் அவர்களிடம் இருந்து சங்கராச்சாரியாருக்கு எதிராக பொய்சாட்சி வாங்க முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தொகாடியா,
சங்கராச்சாரியார் ஒரு வாரத்தில் விடுதலை செய்யப்படாவிட்டால் நாடு முழுவதும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.
சங்கரராமன் குடும்பத்துக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை (உதவித் தொகையைத் தான் இப்படிச் சொன்னார்தொகாடியா) தந்திருக்கிறார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தால் கூட அதிகபட்சமாக எந்த மாநிலமும் ரூ. 2 லட்சம் தான்தருகிறது.
சங்கரராமன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் தந்தது ஏன்? சங்கராச்சாரியாருக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்காக இந்தப் பரிசுத்தொகையா?
இந்த வழக்கு விசாரணையை குஜராத்துக்கு மாற்ற வேண்டும். இந்துக்களின் நம்பிக்யைைப் பெற்ற அரசு குஜராத்தில் தான்இருக்கிறது.
சங்கராச்சாரியார் கைது விஷயத்தில் சோனியா காந்தி அமைதி காப்பது ஏன்? நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்தவிவகாரம் குறித்து இவர் பேசமாட்டாராம். பில்கிஸ் பானு (குஜராத் வன்முறையின்போது கொலைக் கும்பலால்கற்பழிக்கப்பட்டவர்) விஷயத்தில் இவர் பேசாமல் தான் இருந்தாரா?
சங்கராச்சாரியாரை கைது செய்ய தமிழக போலீஸ் வந்தது குறித்து மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் தெரிவித்தாரா? யாரிடம்தெரிவித்தார்? அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதையும் விளக்க வேண்டும."
ஜெயேந்திரரை 1 வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள், விவசாயிகளையும் திரட்டிவிஎச்பி போராட்டத்தில் குதிக்கும் என்றார்.
இந் நிலையில் நாளை ராஞ்சியில் தொடங்கும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் சங்கராச்சாரியார் விவகாரம் குறித்துவிரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications