மும்பை: அமெரிக்கத் தூதரகம் திடீர் மூடல்
மும்பை:
மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று திடீரென மூடப்பட்டது. தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்என்று உளவுப் பிரிவினர் எச்சரித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரும் பாதியிலேயே திடீரென வீடுகளுக்குத் திரும்புமாறு அனுப்பப்பட்டுவிட்டனர்.இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பையில் அமெரிக்கர்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடக்கலாம் என்று அமெரிக்க அரசு தங்களுக்குஎச்சரிக்கை அனுப்பியுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள், ஹோட்டல்கள், வழிபாட்டு மையங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகலாம்என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அமெரிக்கத் தூதரகததைச் சுற்றி கமாண்டோ போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத்தூதரகம் வழக்கம்போல் இயங்குகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications