கருணாநிதி, ஜோஷி, விஎச்பிக்கு ஜெ கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரர் வழக்கு தொடர்பாக உள் நோக்கம் கற்பித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயேந்திரர் கைது தொடர்பாக ஆரம்பத்தில் தமிழக அரசையும், காவல் துறையையும் பாராட்டியும், ஜெயேந்திரர் போன்றமக்களை ஏமாற்றும் சாமியார்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் கருணாநிதி அறிக்கை விட்டார், பேட்டியும் கொடுத்து வந்தார்.

எச்சரிக்கை அறிக்கை:

பின்னர் தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். ஜெயலலிதா தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஜெயேந்திரரைக்கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந் நிலையில், ஜெயலலிதா ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி, முரளி மனோகர் ஜோஷி,அசோக் சிங்கால் ஆகியோருக்கு கடும் வார்னிங் தந்துள்ளார் ஜெயலலிதா.

அந்த அறிக்கையின் விவரம்:

புவி ஈர்ப்பு விசையை மீறி...

சந்தன வீரப்பனை அதிரடிப் படையினர் வீழ்த்தியபோது அதை கருணாநிதி பாராட்டினார். அதேபோல, நடு நிலையுடன்செயல்பட்டு தமிழக காவல்துறை ஜெயேந்திரரை கைது செய்தபோதும் அதை கருணாநிதி பாராட்டினார்.

ஆனால் இப்போது அந்தர் பல்டி அடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

புவி ஈர்ப்பு விசையையும் மீறிய 180 டிகிரி கரணம் அல்லவா இது? ஆரம்பத்தில் பாராட்டுவது போல எனது அரசை பாராட்டியகருணாநிதி இப்போது தனது வழக்கமான கோயபல்ஸ் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.

முதலைக் கண்ணீர்:

ஜெயேந்திரர் கைதானபோது மகிழ்ச்சியையும், களிப்பையும் வெளிப்படுத்திய கருணாநிதி இப்போது திடீரென அவர் மீது பரிவுகாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

இட்டுக் கட்டிய கதைகளைக் கூறி குழப்பத்தை உருவாக்குவதுதான் அவரது புதிய உத்தி போலத் தோன்றுகிறது. ஜெயேந்திரரைக்கைது செய்வதில் 2 மாத தாமதம் ஏன்? இடையில் நிகழ்ந்தது என்ன என்று அவர் கேட்டிருக்கிறார்.

ஆதாரமற்ற, அவதூறுகளைப் பரப்புவது கருணாநிதியைப் போன்ற ஒருவருக்கு மிகவும் அதிகப்படியான ஒன்று. இதுபோன்றுவெறுப்பூட்டும் பழக்கத்தை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கருணாநிதிக்குத் தெரியாதா?

வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூலிப் படைகள் மூலம் கொலை நடந்த இதுபோன்ற சிக்கலான வழக்கில் உண்மைக்குற்றவாளிகளை நெருங்கிடவே குறைந்தது 2 மாதங்களாகும் என்பது ஏற்கனவே அரசாங்கத்தை நடத்திய கருணாநிதிக்குத்தெரிந்திருக்க வேண்டும்.

முதலில் புலன் விசாரணைக்கு 2 மாத காலம் பிடித்திருக்கும் என்றார், இப்போது மலிவான அரசியல் செய்கிறார். போலீஸார் மிகவிரைவாக செயல்பட்டு குற்றவாளிகள் கூட்டத்தை நெருங்கி, ஜெயேந்திரரை நோக்கிச் செல்லும் அளவுக்கு தெளிவானதகவலைப் பெற்றுள்ளனர்.

இதெல்லாம் வழக்கின் மறுக்க முடியாத உண்மைகளாக இருக்கும்போது திடீரென கருணாநிதிக்கு ஏன் சந்தேகம் வந்தது?சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில்தான் எனது அரசு நடவடிக்கை எடுத்தது.

தனிப்பட்ட விரோதமா?

கைது செய்தால் பாராட்டுவார்கள், கைது செய்யாவிட்டால் பழி சொல்வார்கள் என்று நினைத்து எனது அரசு நடவடிக்கைஎடுக்கவில்லை. சிறையில் அவர் நல்ல முறையில் நடத்தப்படவில்லை என்கிறார் கருணாநிதி. ஆனால் நன்றாக நடத்தப்படுவதாகஜெயேந்திரரே கோர்ட்டில் கூறியுள்ளார்.

எனக்கும், ஆச்சாரியாருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாககருணாநிதி கூறியிருக்கிறார். தனிப்பட்ட விரோதம் என்று கருணாநிதி கூறுவதன் அர்த்தம் என்ன? அந்த தனிப்பட்ட விரோதம்என்ன என்பதை கருணாநிதி வெளிப்படையாக கூறட்டும். கருணாநிதியின் கூற்று அபத்தத்தின் உச்சம்.

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா?

மேலும் எனக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே கொடுக்கல் பிரச்சனை இருந்ததாகவும் பத்திரிக்கைகளுக்கு கருணாநிதிபேட்டி தந்துள்ளார்.

முதல்வர் என்ற முறையில் என்னுடைய கடமைகளை ஆற்றுகையில், இப்படிப்பட்ட அடவாடித்தனமான, அவதூறுகள்பரப்பப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான பொறுப்பற்ற, தீய நோக்கமுள்ள அறிக்கைகள்வெளியிடும் அனைவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இது ஜோஷிக்கு:

பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி நிலை தடுமாறி, மத உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு, கற்பனையான ஆதாரமற்றகருத்துக்களைக் கூறியுள்ளார். கோரமான கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அதனால்தான் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

இது சிங்கலுக்கு:

அதேபோல, அசோக் சிங்காலும் தனது மனம் போன போக்கில் உள்நோக்கம் கற்பித்து விநோதமான கருத்துக்களைக்கூறியுள்ளார். சென்னை அருகே உள்ள மருத்துவமனை பற்றிய விஷயம் ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

இது முற்றிலும் அபத்தமான, பொய்யான குற்றச்சாட்டு.

இவ்வாறு தனது அறிக்கையில் காட்டமாகக் கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+