மருத்துவமனையில் ஜெயலட்சுமிக்கு பரிசோதனை
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் ஜெயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
போலிஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அவரை முழுமையாகமருத்துவ பரிசோதனை செய்ய மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து பெண் போலீஸ் பாதுகாப்புடன் ஜெயலட்சுமி மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். சிபிஐ இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மருத்துவமனை இயக்குனர் கலாவதியிடம்ஜெயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை கொடுத்தார்.
இதையடுத்து மகப்பேறு மருத்துவப் பிரிவில் அதன் தலைமை மருத்துவர் மெரினா பாக்யராஜ், மன நலப் பிரிவு மருத்துவர் ராமசுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஐயப்பன் ஆகியோர் ஜெயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பரிசோதனைகள் நடந்தன. அதன்பின் ஜெயலட்சுமி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றார்.
மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த ஜெயலட்சுமி, எப்போதுமில்லாத வகையில் வெட்கத்துடன்காணப்பட்டார். சோதனைகள் முடிந்தவுடன் விறுவிறுவென ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து பறந்தார்.












Click it and Unblock the Notifications