மூடப்பட்ட மும்பை யு.எஸ் தூதரகம் மீண்டும் திறப்பு
மும்பை:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அமெரிக்கர்கள் மீது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருப்பதாகவும், தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாகவும் அமெரிக்க உளவு நிறுவனம் நேற்று தகவல்அளித்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் மூடப்பட்டது. இந்தியாவில் உள்ளஅமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக் கொண்டது.
இந் நிலையில் தூதரக வளாகத்தில் மத்திய புலனாய்வுத் துறை, ஆந்திர காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம்போல் தூதரகப் பணிகள் நடந்தன. நேற்றுதூதரகம் மூடப்பட்டதால், ஏமாற்றம் அடைந்து திரும்பியவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தூதரகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications