கருணாநிதி தடுமாறுகிறார்: பாஜக குற்றச்சாட்டு
சென்னை:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தெளிவில்லாத நிலைப்பாட்டை எடுத்து விட்டுத் தற்போதுதடுமாறி வருகிறார் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டவுடன் கருணாநிதி அந்தசெயலை வெகுவாகப் பாராட்டினார். தமிழக காவல்துறையையும் அவர் புகழ்ந்து தள்ளினார்.
ஆனால் அடுத்த 24 மணி நேரத்திலேயே அவரது நிலை மாறியது. ஜெயேந்திரர் கைதில் உள்நோக்கம் இருப்பதாகவும்,ஜெயலலிதா மீதும் அவர் புகார் கூறி பேசத் தொடங்கினார். அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் அவர் தனது நிலையை மாற்றிக்கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக கருணாநிதி தடுமாறுகிறார். ஜெயலலிதா மீது இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியைப்பயன்படுத்தி இந்துக்களின் ஓட்டுக்களை எப்படியாவது கவர்ந்து விடுவது என்ற நோக்கத்தில் கருணாநிதி இருப்பதாக நாங்கள்சந்தேகிக்கிறோம்.
ஜெயேந்திரர் வழக்கில் குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். எனவே ஜெயேந்திரர் மீதானசந்தேகம் வலுவிழந்துள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மற்ற கொலைகள் நடந்தபோது நிவாரணம் வழங்காத முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரராமன் குடும்பத்திற்கு மட்டும் ரூ.5லட்சம் நிவாரணம் வழங்குவது ஏன் என்று கேட்டார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications