இ-மெயில் மிரட்டல்: வாலிபர் கைது!
சென்னை:
டாஸ்மாக் மதுக் கடைகள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத் தலைமை அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில், சென்னைபாரிமுனை முதல் கூடுவாஞ்சேரி வரை உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் கடைகளில், 5 கடைகள் வெடிகுண்டுகள் வைத்துத்தகர்க்கப்படும்.
உடனடியாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குண்டுவெடிப்பு தொடரும்என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மெயில் குறித்து சென்னை மாநகர சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் டாஸ்மாக் அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
மெயிலை அனுப்பியவரின் இ-மெயில் ஐடி மற்றும் அது அனுப்பப்பட்ட இடம் ஆகியவற்றை வைத்து போலீசார் தங்கள்புலனாய்வை தொடங்கினர் போலீஸார்.
இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து என்பது தெரியவந்தது. இங்கிருந்து மெயில்அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அந் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்,பிரேம்குமார் என்பவர்தான் அந்த மெயிலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். விஜயகாந்த்தின் ரமணா படத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டேஇதுபோன்ற இ-மெயிலை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சைபர் குற்றத் தடுப்புப் போலீஸ் பிரிவின் திறமையை அறிவதற்காகவே இந்த இ-மெயிலை அனுப்பியதாகவும்பிரேம்குமார் கூறியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications