சென்னை: மாநகராட்சி கூட்டத்தில் அமளி
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று திமுக கவுன்சிலர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். துணை மேயர் கராத்தேதியாகராஜனையும் தாக்க அவர்கள் முயன்றனர்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று காலை துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போதுசென்னை நகரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்து உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர்.
அப்போது திமுக கவுன்சிலர்கள் எழுந்து வேறு பிரச்சினை குறித்து பேசத் தொடங்கினர். அவர்களை அமருமாறு கராத்தேதியாகராஜன் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை திமுகவினர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினர்.
இந்தக் கட்டத்தில் கராத்தே தியாகராஜன் குறித்து சில திமுக கவுன்சிலர்கள் ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் அதிமுககவுன்சிலர்கள் கோபமடைந்து பதிலுக்கு அவர்களும் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர்.
இதனால் சபையில் பெரும் குழப்பம், அமளி ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் கராத்தே தியாகராஜன் இருக்கையை நோக்கிபாய்ந்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த கராத்தே தியாகராஜன், திமுக கவுன்சிலர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து அவைக் காவலர்கள் விரைந்து வந்து திமுகவினரை வெளியேற்றினர். அதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications