மீனவர் கடத்தல்: மன்மோகனுக்கு ஜெ. கடிதம்
சென்னை:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுள்ளது குறித்து உடனடியாக நடவடிக்கைஎடுக்குமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 1,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீன்களைப் பிடித்த பின்னர் தலைமன்னார் அருகேநடுக் கடலில் வைத்து தங்களது மீன்களை பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். 3 படகுகளை மட்டும் சுற்றி வளைத்த அவர்கள் மற்ற மீனவர்களைதுப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டி அடித்தனர்.
பின்னர் 3 படகுகளையும், அதில் இருந்த 12 மீனவர்கள், ஏராளமான மீன்கள் ஆகியவற்றுடன் அங்கிருந்து இலங்கை சென்றுவிட்டனர். இதுகுறித்து தமிழக மீனவளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதட்டம் நலவுகிறது.
ஜெ. கடிதம்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் ஆகியோருக்கு இன்று அவசரகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சர்வதேச எல்லையை கடந்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி கைது செய்துவருகிறார்கள். அதேபோல தற்போதும் 12 மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச்சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் தங்களது பிழைப்புக்காக கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையே நம்பியிருக்கிறார்கள். ஆனால்இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்கள் இங்கே மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது.
எனவே வழக்கம் போல தமிழக மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கும்வகையில், நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
மேலும் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தூதரக அளவில்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசின் பிடியில் இதுவரை 33 மீனவர்களும், அவர்களுடைய 98 படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.இவர்களையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications