ஜெயேந்திரர் விவகாரம்: மேடைகளில் பேச கோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரர் வழக்கு குறித்து பொதுக் கூட்டங்களில் விவாதிக்க அரசியல் கட்சிகள், அரசியல் சாரா அமைப்புகளுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராம முத்துராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்தார். ஜெயேந்திரர் கைதை ஆதரித்து தான் பந்தளடி கீழ்புரம் பகுதியில் பொதுக் கூட்டத்தில் பேச அனுமதிகோரியபோது, சட்டம் ஒழுங்கு கெடும் என்று கூறி டிஎஸ்பி அனுமதி மறுத்தார்.

அடிப்படை பேச்சுரிமையைப் பாதிக்கும் வகையில் இந்த தடை உள்ளது. எனவே தடையை நீக்கி நான் பொதுக் கூட்டத்தில்பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் முத்துராமலிங்கம் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், அரசியல் சட்டம் 19(1)ஏ மற்றும் 19(1)பி ஆகிய பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சிகள்மற்றும் அரசியல் சாரா அமைப்புகளின் பேச்சுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட மதம் குறித்து பேசுவதன்மூலம் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் மனது புண்படும் என்று நினைத்தால் அவ்வாறு பேசுவதற்குத் தடை விதிக்க முடியும்.

மனுதாரர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தால் குறிப்பிட்ட மதத்தினரிடையே கொந்தளிப்பு ஏற்படலாம் என்றசந்தேகத்தில்தான் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையும் இங்கு நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

இதேபோல, ஜெயேந்திரர் கைதை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்திற்குத் தடை விதித்துள்ள காவல்துறை, கைதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கக் கூடாது. இரண்டு விஷயங்களிலும் ஒரே மாதியான நிலைப்பாட்டை காவல்துறை கடைப்பிடிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+