கொலையாளிகளை அடையாளம் காட்டினார் பத்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Padmaசங்கரராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளும் காணும் வகையில் அடையாள அணிவகுப்புசென்னை மத்திய சிறையில் நடத்தப்பட்டுள்ளது.

சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, கோவில் ஊழியர்கள் இரண்டு பேர் ஆகியோர் கொலையாளிகளை அடையாளம்காட்டினர்.

சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையில் 6 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் முதலில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரராமன்வீட்டுக்குத் தான் சென்றனர். அங்கு போய் சங்கரராமன் எங்கே என்று கேட்க, அவர் கோவிலில் இருக்கிறார் என்று தாய் பத்மா,மகள் உமா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

இதையடுத்தே அக் கும்பல் அங்கு சென்று சங்கரராமனைத் தீர்த்துக் கட்டியது. இதனால் கொலையாளிகளை நேரில் பார்த்தபத்மா, உமா, மேலும் கணேஷ் உள்ளிட்ட இரு கோவில் ஊழியர்கள் இருவரையும் வைத்து கொலையாளிகளின் அடையாளஅணிவகுப்பை போலீசார் இன்று நடத்தினர்.

இந்தக் கொலை வழக்கில் கைதான 19 பேரும் சென்னை மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும்70 கைதிகளையும் கலந்து மத்திய சிறையிலேயே அடையாள அணிவகுப்பை போலீசார் நடத்தினர்.

திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.

கூலிப் படையினரையும் சேர்த்து மொத்தம் 90 கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். முதலில் கைதிகளை வரிசையாக நிறுத்திஅவர்கள் சட்டையில் நம்பர் போட்டு அடையாளம் காட்டும்படி சொல்லப்பட்டது. பின்பு கைதிகள் சட்டை இல்லாமல் வேறுஇடத்தில் மாற்றி நிற்க வைத்து அடையாளம் காட்டும்படி சொல்லப்பட்டது. கடைசியாக வேறு சட்டையில் கூலிப்படையினரைஅடையாளம் காட்ட சொன்னார்கள்.

இவ்வாறு 3 சுற்று அடையாள அணிவகுப்பு நடந்தது.

சங்கரராமனின் மனைவி பத்மா முதல் சுற்றிலேயே கூலிப்படை தலைவன் சின்னாவையும், அம்பிகாபதியையும் அடையாளம்காட்டினார். கொலையாளிகள் மாற்றி நிறுத்தி வைக்கப்பட்டபோதும், பத்மா அவர்களை சரியாக அடையாளம் காட்டினார்.அதேபோல் கணேசும் கூலிப்படையினர் 6 பேரையும் அடையாளம் காட்டினார்.

இதன்மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பு சுமார் ஒரு மணிநேரம்நடந்தது. அணிவகுப்பு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+