ஹேபியஸ் கார்பஸ்: தப்பித்தார் குமரி வக்கீல்
சென்னை:
ஜெயேந்திரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு)மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த வில்பிரட் பிரகாஷ் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ஜெயேந்திரர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உயர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். அவரை விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிரகாஷுக்கு கடும் கண்டனம்தெரிவித்தது. எந்த அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள் என்று பிரகாஷை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
வழக்கு செலவு முழுவதையும் அபராதத் தொகையாக வசூலிக்கப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர். இந் நிலையில்இன்றைக்கு அந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் மனு மீதான விசாரணையை நீதிபதிகள்மேற்கொண்டனர்.
அப்போது வில்பிரட் பிரகாஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல்செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், அபராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்றும் வில்பிரட் பிரகாஷ்கோரியிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக் குமார் ஆகியோர் பிரகாஷின் மன்னிப்பை ஏற்பதாகதெரிவித்தனர். பின்னர், பிரகாஷ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அதைத் தள்ளுபடி செய்தனர்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications