2வது வழக்கு தெய்வ சோதனை: சங்கரமடம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் மீது புதிதாக இன்னொரு வழக்கு தொடரப்பட்டிருப்பது தெய்வ சோதனையாகும் என்று சங்கரமடத்தின் செய்தித்தொடர்பாளர் சுப்பிரமணியம் கூறினார்.
சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கும் எந்ததொடர்பும் இல்லை. ராதாகிருஷ்ணன் 2 மாதத்திற்கு முன்புகூட சங்கர மடத்திற்கு வந்து சென்றார்.
இப்போது அந்த வழக்கில் ஜெயேந்திரரை சேர்த்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அவருக்கு கைதுவாரண்டு பிறப்பித்தது தெய்வ சோதனையாகும்.
கார்த்திகை தீப விழாவை எளிமையாக கொண்டாடுமாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்குத் தெரிவித்துள்ளார்.சங்கர மடத்தில் எப்போதும் போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications