ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் எங்கே?
சென்னை:
| ஜெயேந்திரர் உத்தரவுப்படி கூலிப்படையினரால் தாக்கப்பட்ட சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சங்கர மட பக்தரான ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது.
ஆடிட்டரான ராதாகிருஷ்ணன் சங்கர மடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மடத்துடனான தொடர்புகளைத்துண்டித்துக் கொண்டார். இந் நிலையில் சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில், சங்கர மடம் குறித்து அவர் செய்திகளை வெளியிட்டதாகக் கருதியஜெயேந்திரர் தரப்பு, ஆத்திரம் கொண்டு ராதாகிருஷ்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதன் பேரில், கூலிப் படையினரை ஏவி கடந்த 2002ம் ஆண்டு அவரும் மனைவியும் தாக்கப்பட்டனர். மேலும் ஆட்டோவைவிட்டு மோதியும் அவர்களைக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால், இரு முறையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். |
ராதாகிருஷ்ணன் மீதான இந்தக் கொலை முயற்சி வழக்கு காவல் நிலையத்தில் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது. பரணில் தூக்கிப்போடப்பட்ட இந்த பைல் இப்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயேந்திரரையும் ஒரு குற்றவாளியாகசேர்த்துள்ளனர் போலீசார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேட்டி எடுக்க பத்திரிக்கை நிருபர்களும்தினமும் அவரது வீட்டுக்குப் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
நமது நிருபர் அவரது வீட்டைத் தொடர்பு கொண்டபோது, அவர் திருப்பதி சென்றுள்ளதாக பதில் கிடைத்தது.
உண்மையில் அவர் திருப்பதிதான் சென்றுள்ளாரா அல்லது வழக்கு, பேட்டி தொல்லைக்குப் பயந்து தலைமறைவாகி விட்டாராஎன்று தெரியவில்லை.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications